சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆகி வந்தது. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா பட குழு #huntforpushpa என்ற ஹேஷ்டேக்கின் கீழ் புஷ்பா 2 தி ரூல் என படத்தின் தனித்துவமான கான்செப்ட் வீடியோவை வெளியிட்டார்கள்.
2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளியாகியது இந்த திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவானது. இந்த திரைப்படத்தின் மூலம் பான் இந்திய திரைப்படம் என்றால் என்ன என்பதை உணர்த்தியது ஒரு சாதாரண நடிகனை உலகளவிய நாயகனாக இந்த கதை நிலை நிறுத்தியது. அதேபோல் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது வசூலிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
இந்த நிலையில் தற்பொழுது புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் மிகவும் எதிர்பார்ப்பு திரைப்படமாக விளங்கி வருகிறது. வேர் இஸ் புஷ்பா என்ற ஹேஷ்டேக் உடன் சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய கான்செப்ட் வீடியோவின் கிலிம்ஸ் வீடியோ இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து இரண்டாம் பாகத்தின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து அப்டேட் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படி இருக்கும் வகையில் புஷ்பா 2 பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டது இனி புஷ்பாவின் ஆட்சி ஆரம்பம் புஷ்பாவின் கதையும் எழுச்சியும் இரண்டாவது பாகத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும் எனவும் ஜஹான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தின் தனித்துவமான சித்தரிப்பு உலகம் முழுவதும் வரவேற்பு பெற இயக்குனர் சுகுமார் திரையில் உருவாக்கிய காட்சிகள் ஒரு புயலை போல் மீண்டும் மக்களைத் திரையரங்கிற்கு கொண்டு வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
புஷ்பா 2 என்பதை விட அதில் உள்ள வசனங்கள் மூலம் மக்களின் குரல் மேலோங்கி இருக்கும் எனவும் கிரிக்கெட் வீரர்கள் அரசியல்வாதிகள் பிரபலங்களை அனைவரும் புஷ்பா 2 வில் உள்ள வசனத்தை பயன்படுத்தி உள்ளார்கள் எனவும் அனைவருக்கும் தெரியும். இந்த திரைப்படம் தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் கவனிக்கத்தக்க திரைப்படமாக மாறும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை மேலும் புஷ்பா படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
புஷ்பா இரண்டாவது பாகத்தில் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது இந்த போஸ்டரில் அல்லு அர்ஜுன் பெண் தெய்வ வேடமிட்டு போஸ் கொடுத்துள்ளார் இந்த போஸ்டரை டிசைன் செய்தவர் டியூனி ஜான் இவர் ஏற்கனவே புஷ்பா முதல் பாகத்தின் போஸ்டரை வடிவமைத்தவர். அதுமட்டுமல்லாமல் அஜித் நடிப்பில் வெளியாகிய மங்காத்தா, பில்லா 2, மகான், ஜிகர்தண்டா என பல திரைப்படங்களுக்கு போஸ்ட் டிசைனராக பணிபுரிந்தவர்.
புஷ்பா, புஷ்பா 2 ஆகிய திரைப்படத்திற்கு டிசைன் செய்த இவர்தான் அஜித்தின் மங்காத்தா பில்லா 2 ஆகிய திரைப்படத்திற்கு டிசைன் செய்தவர் என்பது பலருக்கும் தற்பொழுது தெரியவந்துள்ளது.