புஷ்பா 2 அதிரடி அப்டேட்.. வதந்திகளுக்கு முற்றுபுள்ளி.!

pushpa
pushpa

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக புஷ்பா திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இந்த திரைப்படத்தினை சுகுமாரி இயக்கத்தில் பான் இந்திய படமாக வெளிவந்து இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதில் சாய்பல்லவி நடிக்கிறாரா இல்லையா என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் என முக்கிய நடிகர்களின் கூட்டணியில் உருவான புஷ்பா நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.மேலும் இந்த படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார் இந்தியா முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

அந்த வகையில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது இவ்வாறு இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என முடிவு செய்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் அதே கூட்டணியில் தற்பொழுது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் புஷ்பா 2வில் விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

saipallavi-
saipallavi-

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்போது அதற்கு பட குழுவினர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் லவ் ஸ்டோரி,ஷியா சிங்கா ராய், விராட பர்வம், கார்கி ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் புஷ்பா 2 வில் படகு குழுவினர்கள் சாய்பல்லவி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அதில் பழங்குடியின் பெண்ணாக முக்கிய கதாபாத்திரதில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் சாய் பல்லவி நடிப்பது குறித்து படக்குழுவினர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள் அதாவது புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை என்றும் பழங்குடியின பெண் கேரக்டரில் அவர் நடிப்பதாக வெளிவந்த தகவல் வதந்தி எனவும் கூறப்படுகிறது.மேலும் அப்படி சாய்பல்லவி நடித்தால் படக்குழுவினர்கள் மூலயமாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்கள்.