வருகின்ற 2022 ஆம் ஆண்டு IPL லில் 10 அணிகள் விளையாட இருப்பதால் ஏற்கனவே 8 அணிகள் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரீலிஸ் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டு அதன்படி அனைத்து அணிகளும் சிறந்த வீரர்களை தன்வசப்படுத்திக் கொண்டு மீதி வீரர்களை ஏலத்தில் விட்டு உள்ளது.
சிறந்த அணிகள் சிறப்பான வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் அணியும் சிறந்த வீரர்களை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பஞ்சாப் அணி 2 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது. அதிலும் குறிப்பாக கேப்டன் கே. எல். ராகுல் எடுக்காமல் விட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளூர் விளையாட்டு வீரர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரை மட்டுமே தன் வசப்படுத்தியுள்ளது. சமி, கிறிஸ் கெயில் போன்ற டாப் வீரர்களை கழட்டி விட்டதோடு மட்டுமில்லாமல் கேப்டன் கே எல் ராகுலையும் கழட்டிவிட்டு உள்ளது. இது குறித்து அனில் கும்பிளே கூறியது : கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கள் அணியில் முக்கிய வீரராக திகழ்ந்தவர் கேஎல் ராகுல்.
அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பயிற்சியாளராக வந்தபின் அவர் கேப்டனாக இருந்தார். அவரை நாங்கள் அணியில் தக்க வைக்க விரும்பினோம் தொடர்ந்து அணியில் வைத்திருக்கவும் செயல்பட விரும்பினார் ஆனால் ராகுல் தன்னை விடுவிக்கும்படி சொல்ல விரும்புவதால் அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் விடுவித்து விட்டோம் ஆனால் நிச்சயம் ராகுலை வாங்கி அவரை மீண்டும் நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என கூறி உள்ளார்.
முன்னதாக இன்சைடு போர்டு செய்திகளின்படிலக்னோ அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் புகார் கொடுத்துள்ளது அதாவது விதிமுறைகளை மீறி புதிய ஐபிஎல் லக்னோ அணி அதற்கு முன்பாகவே கேஎல் ராகுல் பிடித்துக் கொள்ள ஆசை காட்டியதாக கூறி எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது இது உண்மையாகும் பட்சத்தில் ஓராண்டு தடை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.