விஜய் டிவி புகழை நம்பித்தான் இருக்கிறது.! என, ஒரே போடு போட்ட பிரபல சீரியல் நடிகை.!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகர் புகழ். இவரின் சிறந்த காமெடி திறமையினால் தொடர்ந்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

அந்த வகையில் இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் தான் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வருடங்களாக கோமாளியாக பங்கு பெற்று வருகிறார்.இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து  ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

எனவே தற்போது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால் புதிதாக காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புதிய நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் சீரியல் நடிகைகளும் காமெடி நடிகர்களையும் வைத்து உருவாக்கி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அனைத்து சீரியல் நடிகைகளும் புகழை இம்ப்ரஸ் செய்யவேண்டும். அதற்கு பலரும் பலவற்றை கூறிவரும் நிலையில் தர்ஷா குப்தா விஜய் டிவி உன்னை நம்பித்தான் இருக்கிறது புகழ் என ஒரு மடி மேலே போய் கூறி உள்ளார்.

அதற்கு புகழ் பதறிப் போகிறார் பிரியங்கா புகழுக்காக ஒரு பாடல் போடுகிறார் ஒரே காமெடியாக இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.