16 வயசுல குடிக்க ஆரம்பிச்சது நிறுத்தவே முடியல.! மொத்தத்தையும் இழந்து நிற்கும் புதுப்பேட்டைநடிகர்.!

pudhupettai
pudhupettai

புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த சுரேஷ் என்னுடைய குடிப்பழக்கத்தினால் தான் அனைத்தையும் இழுந்தேன் என உருக்கமாக பேட்டியில் கூறியுள்ளது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் புதுப்பேட்டை. இந்த திரைப்படத்தில் தனுஷ் கேங்ஸ்டர் ஆக நடித்திருப்பார் அதுமட்டுமில்லாமல் தனுஷ்க்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சினிமாவில் தன்னை உயர்த்திக்கொள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. புதுப்பேட்டை திரைப்படத்தில் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார் அவருக்கு குருவாக  சுரேஷ் என்பவர் நடித்திருந்தார்.

அவர் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் அவர் கூறிய விஷயம் தான் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் கூறியதாவது என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் மூலம்தான் எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசையே வந்தது. அவர்கள் தான் உனக்கு டான்ஸ் நன்றாக வருகிறது எனக் கூறி இயக்குனர் புலியூர் சரோஜா வீட்டிற்கு டான்ஸ் கற்றுக் கொள்ள அனுப்பினார்கள்.

புலியூர் சரோஜா டான்ஸ் கற்றுக் கொடுப்பதை நிறுத்தி விட்டதால் லலிதா மணி மாஸ்டரிடம் என்னை அனுப்பினார்கள். அவர்தான் எனக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்து யூனியன் கார்டையும் பெற்று  கொடுத்தார். முதலில் நான் கழுகுமலை கள்ளன் திரைப்படத்தில் குரூப் டான்ஸ் ஆடினேன் அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஒத்தடி ஒத்தடி கொஞ்சம் ஓரமா ஒத்தடி என்ற பாட்டுக்கு நடனம் ஆடினேன்.

அப்படியே கலாமாஸ்ட்டர் பிருந்தா மாஸ்டர் பிரபு தேவா என அனைத்து நடன மாஸ்டர் குரூப்பிலையும் நான் நடனமாடி சம்பாதித்தேன். டான்சராக பல வருடம் இருந்தாலும் என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது ஆனால் புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு தான் என்னை பலருக்கும் தெரிய வந்தது காதல் கொண்டேன் திரைப்படத்தில் குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது செல்வராகவன் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறினார்.

காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு புதுப்பேட்டை திரைப்படம் எடுக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது செல்வராகவன் சார் என்னை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் என்ன பிரயோஜனம் அந்த திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் என்னால் குடிப்பழக்கத்தை விடவே முடியவில்லை எல்லாம் குடிப்பழக்கத்தால் போச்சு நான் 16 வயதில் குடிக்க ஆரம்பித்தேன் என்னால் நிறுத்தவே முடியவில்லை.

குடிப்பழக்கம் மட்டும் இல்லை என்றால் நான் ஒரு நல்ல நடிகனாக வளர்ந்து இருப்பேன். தற்பொழுது ஒன்றரை வருடமாக தான் குடிப்பழக்கத்தை விட்டுள்ளேன். இப்பொழுது தான் எனக்கு புரிகிறது எல்லாவற்றையும் யோசிக்கிறேன் இப்பொழுது சினிமாவுக்குள் நுழைய பல பேர் கஷ்டப்படுகிறார்கள் அதை எல்லாம் பார்க்கும் பொழுது நான் எவ்வளவு பெரிய தப்பு செய்துள்ளேன் என புரிகிறது என புலம்பி தள்ளுகிறார் புதுப்பேட்டை சுரேஷ்…

pudhupettai
pudhupettai