Pudhupettai : தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் அந்த திரைப்படத்தை அப்பொழுதே கொண்டாடுவார்கள். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் காலம் கடந்து கொண்டாடுவார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்த திரைப்படம் தான் புதுப்பேட்டை இந்த திரைப்படத்தை செல்வராக வந்தான் இயக்கியிருந்தார்.
பொதுவாக செல்வராகவன் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெறும் அதே போல் செல்வராகவன் திரைப்படத்தை ஆரம்பத்தில் கொண்டாடவில்லை என்றாலும் காலம் கடந்து கொண்டாடுவார்கள். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் புதுப்பேட்டை கார்த்தி நடிப்பில் வெளியாகிய ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ஆரம்பத்தில் கொண்டாடவில்லை என்றாலும் பிறகு கொண்டாடினார்கள்.
புதுப்பேட்டை திரைப்படம் தனுஸ் ரசிகர்களுக்கு மட்டும் ஸ்பெஷலான திரைப்படம் என்று கூற முடியாது ஏனென்றால் அந்த அளவு வெகுவாக மற்ற ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தில் சினேகா விலை மதுவாக நடித்திருந்தார்.
ஆனால் சினேகாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இதன் நிலையில் புதுப்பேட்டை திரைப்படத்தில் சினேகாவின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை காயத்ரி ரகுராம் தான் இவர் விசில், சார்லி சாப்ளின் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதேபோல் புதுப்பேட்டை திரைப்படத்திற்காக போட்டோ ஷூட் முதல் கொண்டு எடுத்திருந்தார்கள் ஆனால் இந்த திரைப்படம் ஆறு மாதம் தொடங்குவதற்கு நாளாகும் என்பதால் காயத்ரி ரகுராம் திடீரென விலகி விட்டார் பிறகு தான் செல்வராகவன் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான ஆளைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் சினேகா உள்ளே வந்தார் என கூறப்படுகிறது.