செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் தான் புதுப்பேட்டை, இந்த திரைப்படத்தை யாராலும் மறுக்க முடியாது ஏனென்றால் தனுஷுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய திரைப்படம் மேலும் இந்த திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியாகியது இந்த திரைப்படத்தில் சோனியா அகர்வால் சினேகா தனுஷ் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார் மேலும் புதுப்பேட்டை திரைப்படம் தமிழ்நாட்டில் 162 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது அதேபோல் சென்னையில் வசூலில் முதலிடத்தை தக்க வைத்தது, உலக அளவில் 250 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படம் ஒரு முழு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவானது. ஒரு கூட்டத்திற்கு தலைவன் என்பவன் முரட்டு உடம்பு கம்பீரமான தோற்றத்துடன் இருப்பார்கள். ஆனால் ஒரு பையை மாட்டிக் கொண்டு ஒல்லி ஆன தேகம் கொண்ட ஒரு பையன் மிகப்பெரிய கேங்ஸடாராக ஆகிறான் இதை யாராலும் சொன்னால் நம்ப முடியாது அந்த அளவு செல்வராகவன் இந்த திரைப்படத்திற்கு மெனக்கேட்டுள்ளார்.
அப்படி என்ன புதுப்பேட்டை திரைப்படத்தில் பாராட்டுவதற்கு இருக்கிறது என்று கேட்டால் 2023 ஆம் ஆண்டில் நமக்கு தோன்றுவதில் தவறில்லை இன்று கேங்ஸ்டர் திரைப்படத்தில் கிட்டத்தட்ட நாம் புதிதாக பார்ப்பதற்கு எதுவும் இல்லாத அளவிற்கு அத்தனை படங்களை அத்தனை மொழிகளிலும் பார்த்து விட்டோம் ஆனால் புதுப்பேட்டை திரைப்படம் அந்த நேரத்தில் வெளியான பொழுது திரையரங்கில் பார்த்த அத்தனை ரசிகர்களுக்கும் தெரியும் இது வித்தியாசமான காட்சி புது காட்சி என்று.
ஒரு காட்சியை பார்த்த ரசிகர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த காட்சி ரசிகர்களை மிரள வைத்திருக்கும். இந்த சிறுவனா கேங்ஸ்டர் என்று கேட்கும் அளவிற்கு தனுஷ் மிரட்டி இருப்பார் அதேபோல் அயோக்கியர்களின் கதை தான் இந்த திரைப்படம் ஆனாலும் இதில் நட்பை புரிந்து கொள்ள முடிந்தது, துரோகத்தை புரிந்து கொள்ள முடியும், வஞ்சத்தையும், கருணையும் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்பதை அழகாக காட்டியிருந்தார்.
புதுப்பேட்டை வெளியான ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் பிடித்திருந்ததா பிடிக்கலையா என்ற குழப்பம் அனைவரிடமும் இருந்து வந்தது ரசிகர்கள் மனதில் வைத்திருந்த ஒட்டுமொத்த ரசனையையும் இந்த திரைப்படம் கலைத்துப் போட்டது.
இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார் அவரது நடிப்பு பெரிதளவு பாராட்டப்பட்டது, ஆனால் முதலில் சினேகா கதா பாத்திரத்தில் நடிக்க இருந்தது பிக் பாஸ் பிரபலமான காயத்ரி ரகுராம் தான் ஆனால் படப்பிடிப்பு ஆறு மாதம் கழித்து தான் எனக் கூறியதால் அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை இந்த திரைப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.