தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன அதில் பெரும்பாலான படங்கள் ஆக்சன், காமெடி மற்றும் காதல் கலந்த படங்களாக தான் இருக்கின்றன. ஆனால் அதிகம் த்ரில்லர் படங்கள் வந்ததில்லை ஆனால் அப்படி வந்த படங்களை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள் அது பற்றிய விலாவாரியாக பார்ப்போம்..
ராட்சசன் : ராம்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகியது. படத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரையுமே சஸ்பென்சாக இருக்கும் படத்தின் கதை ஏற்றவாறு ஜிவி பிரகாஷ் சரியான இசையமைத்து ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைத்திருந்தார் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.
சைக்கோ : மிஷ்கின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக இருக்கும் அதாவது சைக்கோ கொலையாளி ஒருவன் பெண்களை கடத்தி மறுநாளே அவர்களை கொன்று மக்கள் இருக்கும் இடத்தில் வீசி விடுவான். உதயநிதி அதிதி ராவை காதலித்து இருப்பார் அந்த சமயத்தில் கொலையாளி அதிதியை பின்தொடர்ந்து அவரை கடத்தி விடுவான்.
அதன் பிறகு உதயநிதி போலீசிடம் புகார் கொடுப்பார் ஆனால் போலீசாக அலட்சியமாக பன்/எடுத்துக் கொள்வதால் உதய.ள்தி நித்யா மேனன் உதவியை கொண்டு வில்லனை அழித்து தனது காதலியை காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. உதயநிதி கண் தெரியாத கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்த ஆசத்தி இருப்பார். படத்தின் சீன் ஒவ்வொன்றும் மிரடலாக இருக்கும்.
போர் தொழில் : விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சைக்கோ கொலையாளி ஒருவன் பெண்களை வேட்டையாடி அவர்களை காட்டுக்குள் கொலை செய்தது போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறான் அவன் யார் என்பதை கண்டுபிடிக்க சரத்குமார், அசோக் செல்வன் வருகின்றனர் படத்தின் ஒவ்வொரு சீனும் விறுவிறுப்பாக பஞ்சம் இல்லாமல் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய அதிக நாட்கள் ஓடியது.
இறைவன் : சைக்கோ திரில்லர் லிஸ்டில் ஜெயம் ரவி நடித்துள்ள இந்த திரைப்படமும் இணைந்துள்ளது சைக்கோ கொலையாளி தொடர்ந்து பெண்களை கொன்று குவிக்கிறார் இதை இதை தடுக்க ஜெயம் ரவி வருகிறார். ஜெயம் ரவியும், வில்லனும் மோதிக் கொள்ளும் காட்சி மற்றும் உரையாடல் போன்றவை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன.