கையில் வாலுடன் கம்பீரமாக நிற்கும் திரிஷா கையை கட்டிக்கொண்டு மண்டியிட்டு இருக்கும் கார்த்தி.! வைரல் ஆகுது பொன்னியின் செல்வன் 2 புதிய போஸ்டர்…

ponniyin-selvan
ponniyin-selvan

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் போட்டி போட்டார்கள் ஆனால் கடைசியில் மணிரத்தினத்தால் மட்டுமே சாத்தியமானது. அமரர் கல்கியின் கைவண்ணத்தில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக இயக்கத் திட்டமிட்டு முதல் பாகத்தை முடித்தார் மணிரத்தினம் இந்த நிலையில் தற்பொழுது இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பல்வேறு தடங்கலை மீறி பிரம்மாண்டமாக இயக்கினார் மணிரத்தினம் இந்தத் திரைப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவானது செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாகம் மிகவும் பரபரப்பாக உருவாகி வருகிறது. முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் மற்ற திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்வதை போல் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வம் திரைப்படமும் பல கோடி வசூல் செய்தது.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவை தலைநிமிர செய்தது. இந்த நிலையில் பொன்னின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. இதனை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய twitter பக்கத்தில் அறிவித்து இருந்த நிலையில் திரிஷா பல்வேறு கெட்டப் களில் குந்தவையாக இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக தொகுத்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் சற்று முன்பு இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகி உள்ளது இந்த அதிகாரப்பூர்வ தகவலில் அகநக என்ற லிரிக்ஸ் பாடல் மார்ச் 20ஆம் தேதி 6:00 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இந்த போஸ்டரில் திரிஷா கையில் வாலுடன் கம்பீரமாக நிற்கிறார்.

திரிஷா முன்பு கையை கட்டிக்கொண்டு வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி கண்களை கட்டியபடி மண்டியிட்டு இருக்கிறார் அதனால் இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குந்தவையாக நடித்திருக்கும் திரிஷா மற்றும் வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்திக்கு அமைந்திருக்கும் பாடலாக கருதப்படுகிறது. மேலும் ராஜ ராஜ சோழனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

நந்தினி ஆக ஐஸ்வர்யா ராயும் கரிகாலனாக விக்ரமும் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் நடிகர் சரத்குமார் ஐஸ்வர்யா லட்சுமி ஹாஷ் அஸ்வின் கக்கு மன்னு ஜெயசித்ரா சோபிதா என பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளார்கள் அதனால் இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களுடைய மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.