Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மக்கள் போராட்டத்தில் குதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான கமல்ஹாசனின் விஸ்வரூபத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் எழுந்தது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பெரும் பிரச்சனை வெடித்தது.
ஆனால் வருஷத்திற்கு பாலிவுட்டில் பல திரைப்படங்கள் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை மையமாக வைத்து தான் படங்களாக வெளியாகின்றது. சமீபத்தில் வெளியான கேரளா ஸ்டோரி படத்தில் கேரளாவில் உள்ள இந்து பெண்களை மதமாற்றம் செய்து தீவிரவாதிகள் அடிமைகளாக மாற்றி ஐஏஎஸ் தீவிரவாதிகளாக மாற்றுவது போன்ற படத்தின் கதை களம் அமைந்தது.
இனிமே நீ கிளாமரா நடிச்சா அவ்ளோ தான்.! லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிரபலம்
அந்த படத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு பெரும் எதிர்ப்பு வந்திருந்தாலும் வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து. 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி அமரன் படத்தின் டைட்டில், டீசர் வெளியான நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி உள்ளிட்டோர் இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படமாக இருக்குமோ என்ற வீடியோக்களை வெளியிட தற்பொழுது திருச்சியில் உள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் அமரன் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமியை உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த இடத்தில் தேனை ஊற்றி இயக்குனர் நடிக்க சொன்னார்கள்.! பல வருடம் கழித்து உண்மையை சொன்ன நடிகை..
மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசனின் உருவப்படங்களை எரித்து இருக்கிறார்கள். இந்தியாவிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாறு படமாக தான் அமரன் உருவாகி உள்ள நிலையில் உண்மை சம்பவத்தை எடுக்கும்பொழுது எப்படி கதை களத்தை மாற்ற முடியும் என திரையுலகினர்கள் கேட்டு வருகின்றனர்.