தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவ்வாறு பிரபலமான நடிகர் சமீபத்தில் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெறுவது மட்டுமில்லாமல் வசூலிலும் மிக பெரிய சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் என்ற திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது அனைவரையும் வியக்க தக்க விஷயமாக அமைந்துவிட்டது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படமும் சமீபத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நிலையில் ராஜமௌலியின் rrr திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியானது சென்னையில் நடந்துள்ளது இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் போன்ற முக்கிய பிரபலங்கள் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின்போது நடிகர் சிவகார்த்திகேயன் செய்த செயல் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமில்லாமல் மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது அந்த வகையில் அவர் அதை வீடியோவில் கூறியது என்னவென்றால்.
தொகுப்பாளர் மேடையில் ஒவ்வொரு கலைஞரும் பாராட்டி வந்த நிலையில் டிரமஸ் கலைஞரை பாராட்ட மறந்து விட்டால் அதனை சுட்டிக்காட்டும் வகையில் கீழே அமர்ந்தபடி சிவகார்த்திகேயன் அவர்கள் கை வைத்தபடி அவருக்கு ஞாபகம் ஊட்டி உள்ளார்.
இவ்வாறு அவர் செய்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் என்ன மனுஷன்யா என அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.