நம்மவீட்டு மாப்பிளை சீரியலில் ஜோதிகா வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!

விஜய் டிவியில் நம்ம வீட்டு மாப்பிள்ளை என்ற புதிய சீரியல் ஒன்று அறிமுகமாக இருப்பதாக தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் முக்கியமாக விஜய் டிவியில் ஜோதிகா நடிப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் ஜோதிகாவிற்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் கார்த்திக் இணைந்து நடிக்க இருப்பதாகவும் புரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து தங்கள் சீரியல் டிஆர்பி முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக விஜய் டிவி சுவாரஸ்யமான புதிய கதைகளைவுடைய ரசிகர்கள் விரும்பும் வகையில் சீரியல்களை அறிமுகப்படுத்துவதில் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து பல சீரியல்களில் அறிமுகமாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு  என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்  புதிய சீரியல் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளார்.

அந்தவகையில் பிரபல நடிகையான ஜோதிகாவை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நம்ம வீட்டு மாப்பிள்ளை சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் ஜோதிகா சின்னத்திரையில் நடிக்க போகிறார் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்த நிலையில் இது ரசிகர்கள் செய்த எடிட்டிங் வீடியோ என்று தெரியவந்துள்ளது.

கண்டிப்பாக நம்ம வீட்டு மாப்பிள்ளை சீரியலின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது ஆனால் கண்டிப்பாக ஜோதிகா இதில் நடிக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இது வெறும் வெட்டிங் வீடியோ இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version