நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் சமீபகாலமாக பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் கைவசம் அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் இருக்கின்றன அதுமட்டுமில்லாமல் பல இயக்குனர்கள் இவரிடம் கதை கூறிவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டுமென புரோமோஷனல் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் சற்று முன்பு இந்த திரைப்படத்தின் ப்ரமோஷன் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது வெறும் இருபத்தி ஒரு வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த புரோமோவில் சும்மா சுர்ருன்னு என்ற பாடல் காட்சிகளும் சில வசனங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.
இந்நிலையில் தம்பி மட்டும் இந்த பொண்ண தூங்கிட்டானா சூப்பர் வொர்த்து என்று கூறுவதும் இதனை அடுத்து சூர்யாவை பார்த்து சத்யராஜ் தூக்கிடுடா என சொல்வதுபோல் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்தப் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்தப்ரோமா வீடியோவை பார்த்தால் படத்தை பார்க்க அதிக ஆர்வம் தூண்டுவது போல் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்