தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவர் எந்த ஒரு பின்புறமும் இல்லாமல் தனது திறமையை படிப்படியாக வளர்த்து ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் காமெடியான கதைகளை தேர்வு செய்தாலும் ஒரு கட்டத்தில் தனக்கு காமெடி கலந்த கமர்சியல் படங்களை தேர்வு செய்து நடித்தார்.
அந்த ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி படமாக மாறியது. அதிலும் குறிப்பாக இவர் கடைசியாக நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய அசத்தியது. அதன் பிறகு தனது சம்பவத்தையும் ஓரளவு அதிகமாக உயர்த்தி ஓடினார் இப்படி இருந்தாலும் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் தோல்வியை சந்திதது.
இருந்தும் தனது சம்பளத்தை மட்டும் குறைக்காமல் அவர் ஓடுகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சரியாக சொல்லவேண்டும் என்றால்.. நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்த பல தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தாமல் இவர் புது புது இயக்குனர் மற்றும் தெலுங்கு பக்கம் சென்று..
அங்கு டைரக்டர் தயாரிப்பாளர்களுடன் படம் பண்ணுகிறார் இதனால் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்ட தமிழ் இயக்குனர்களை அவர் கண்டுக்கவே இல்லை.. சினிமாவில் இன்னும் நிறைய விஷயம் சிவக்கார்த்திகேயன் தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக அவர் அஜித் போன்ற முன்னணி நடிகர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அஜித் ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் பணிபுரிவார் அந்த படம் தோல்வி படமாக அமைந்து விட்டால் அடுத்த படத்தையும் அந்த நிறுவனத்திற்கு கொடுத்து படம் மிகப்பெரிய லாபம் அடைந்த பிறகு தான் அந்த தயாரிப்பு நிறுவனத்தை விட்டு வெளியே செல்லுவார் அதுதான் அவரது பழக்கம்.. இது போல தயாரிப்பாளர்களுக்கு கைக்கொடுக்க வேண்டும் இதைத்தான் சிவகார்த்திகேயனிடம் இருந்து தயாரிப்பாளர்கள் எதிர்பார்கின்றனர்.