சினிமா உலகில் முன்னணி நடிகைகள் பலரும் ஒவ்வொரு படம் வெற்றி பெறும் போதும் தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது வழக்கம் அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயினாக இருந்து வருகிறார் இவர் கல்யாணமான பிறகு தனது சம்பளத்தை சற்று உயர்த்தி படங்களில் நடித்து வருகிறார்.
இப்பொழுது ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது நயன்தாரா கையில் தற்போது ஜவான், கோல்டு, கனெக்ட் ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டுமே இருக்கின்றன. நடிகை நயன்தாரா 10 கோடி சம்பளம் வாங்குவதோடு மட்டுமல்லாமல் பிரம்மாண்டமான கேரவன் பவுன்சர் உதவியாளர்கள் என பக்கத்தில் வைத்துக் கொள்ளுவதால் அதற்கும் சில கோடிகள் செலவாகிறதாம்.
இதனால் தயாரிப்பாளர்கள் 10 கோடி கொடுப்பது இல்லாமல் இதற்காக தனியாக ஒரு செலவு செய்து வருகின்றனர் இது தயாரிப்பாளர்களை ரொம்ப கடுப்பேற்றி உள்ளது நயன்தாரா தான் இப்படி பண்ணுகிறார் என்றால் சமந்தாவும் சம்பளத்தை உயர்த்தி நடிப்பதால் தயாரிப்பாளர்கள் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகள் போன்றவர்களை நாடி உள்ளனர்.
அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் நாடுகின்றனர் இவர் தற்போது சினிமா உலகில் சோலோவாகவும் முக்கிய ஹீரோகளின் படங்களிலும் நடித்து வருகிறார் இவர் கையில் ஜமுனா டிரைவர், கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த படங்கள் இதுவரை வெளிவராமல் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் தயாரிப்பாளர்கள் இவரை நாடி வருகின்றனர்.
ஆனால் இவரோ நயன்தாராவை பின்பற்றி வருவதாக சொல்லப்படுகிறது ஒரு கோடியே முப்பது லட்சம் சம்பளம் மட்டும் எனக்கு போதாது தனி கேரவன் பவுன்சர்கள் உதவியாளர்கள் என அனைவரும் வேண்டும் ஓகே என்றால் கதை கேட்கிறேன் என கூறியுள்ளார் இதைக்கேட்ட தயாரிப்பாளர்கள் நீ படத்தில் கமிட்டாகவே வேண்டாம் என கூறி அவரை துரத்தி அடிக்கின்றனராம்.