தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு இவர் ஆரம்பத்தில் தொடர்ந்து திரைப்படங்களை கொடுத்து இருந்தாலும் தற்போது ஏதாவது ஒரு திரைப்படத்தை யாவது ஹிட் கொடுக்க மாட்டோமா என ஏங்கி வந்த நிலையில் அவருக்கு வரப்பிரசாதம் போது கிடைத்த திரைப்படம்தான் மாநாடு.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது சுமார் இரண்டு வருடங்களாக பல்வேறு பிரச்சனையை சந்தித்து வந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தற்போது ரிலீஸில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள்தான் இயக்கியிருந்தார் மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார்.
அந்த வகையில் சிம்புவுக்கு இந்த திரைப்படத்தில் ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்ததுமட்டுமின்றி வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார் இவர்களைத் தொடர்ந்து எஸ்ஏ சந்திரசேகர் மகேந்திரன் மனோஜ் பாரதிராஜா பிரேம்ஜி அவர்கள் இந்த திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் சென்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர்கள் கூறினார்கள். பின்னர் லைசென்ஸ் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியிட முடியவில்லை என தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
பின்னர் ஃபைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு என்ஓசி வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த திரைப்படம் பிறகு வெளியாகின. அந்த வகையில் திரை அரங்கில் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டு ஏழு முப்பது மணிக்கு தான் திரைப்படம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம்” நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம்.
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! #maanaadu
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021