விக்ரமுக்கு ஆசை காட்டி மோசம் செய்த தயாரிப்பாளர்..! மிகுந்த மன உளைச்சலில் ரசிகர்கள்..!

vikram-01
vikram-01

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் தயாரிப்பாளர் லலித்குமார் இவர் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தற்போது மகான் மற்றும் கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு உருவாகும் இந்த இரண்டு திரைப்படங்களின் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் உருவாகிவரும் மகான் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.

இவர் இருவரும் ஒரே திரைப்படத்தில் நடிப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து விட்டது அதுமட்டுமில்லாமல் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோபுர திரைப்படத்தில் எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.

ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் படப்பிடிப்புகள் ஆரம்பித்த நிலையில் இருந்து வெகு வருடங்களாக  முடிக்கப்படாமல் இருந்துவருகிறது இவ்வாறு இந்த இரண்டு திரைப்பட இயக்குனர்களும் திரைப்பட படப்பிடிப்பை ஜவ்வு மிட்டாய் போல இழுத்துக்கொண்டே போகிறார்களாம்.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களையும் திரையரங்கில் வெளியிடாமல் இணையத்தில் வெளியிடலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கஷ்டப்பட்டு நடித்த இந்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டால் மட்டுமே ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும்.

ஆனால் இப்படி இணையத்தில் வெளியிட்டால் ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார் என்பது  தெரிந்த விஷயம் தான் ஆனால் தயாரிப்பாளர் இப்படி எடுத்த முடிவானது  பலரையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.