சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பல திரைப்படங்களும் இவர் நடிப்பில் வெளியாகி வருகிறது .
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சண்டைகள் ஏற்பட்டு உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது.சமீபத்தில் இவர் நடிப்பில் ஹீரோ திரைப்படம் வெளிவந்து சுமாராக வசூல் சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவானது ஆனால் போட்ட காசை கூட இருக்க முடியாத அளவிற்கு வசூலை பெற்றது. அந்தவகையில் இத்திரைப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது.
இத்திரைப்படம் உருவாகி வரும் பொழுது தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என்று அனைவரும் இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விடும் என்று பல அப்டேட்களை வெளியிட்டு வந்தார்கள்.ஆனால் இத்திரைப்படம் பெரும் தோல்வியடைந்தது. விமர்சன ரீதியாகவும் சொல்லுமளவிற்கு பிரபலம் அடையவில்லை.
இத்திரைப்படம் பெரும் தோல்வியை பெற்றதால் அடுத்த திரைப்படமாவது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட வேண்டும் என்பதற்காக கே ஜி ஆர் ஸ்டுடியோ இயக்குனர் நெல்சனுடன் கூட்டு சேர்ந்தார்கள். இந்நிலையில் கேஜி யார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் எனது எஸ் கே புரோடக்சன் மூலம் டாக்டர் திரைப்படத்தை தயாரித்தார்.
அந்தவகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே இத்திரைப்படம் தியேட்டரில் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் மிகவும் வேகமாக பரவி வருவதால் தற்பொழுது தியேட்டர்கள் உட்பட பல தொழில்கள் முடங்கி உள்ளது.
இந்நிலையில் ஓடிடியில் வெளியாகுமா தியேட்டரில் வெளியாகுமாஎன்று தெரியாமல் தடுமாறி வந்தனர்.இந்நிலையில் இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயன் கண்டிப்பாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்தார்.
ஆனால் சிவகார்த்திகேயனுக்கு தெரியாமல் OTT தளத்திற்கு சத்தமில்லாமல் பல கோடிக்கு விற்று விட்டார்களாம் எனவே தற்பொழுது சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே சண்டை முற்றி போயுள்ளது.எனவே சிவகார்த்திகேயன் தற்போது கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தனது சமூக வலைத்தளத்தில் பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்.