தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் அஜித். இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இத்திரைப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல் தல ரசிகர்கள் மோடி உட்பட பலரிடம் வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள்.
இவ்வாறு இந்த பிரச்சினை ஒருபுறம் போய்க்கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் அஜித் என்னிடம் 7லட்ச ரூபாய் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டார் இன்று அஜித் மீது குற்றம்சாட்டி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித்திற்கு பணம் கொடுத்த இருந்த புகைப்படங்களை ஆதாரத்துடன் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதில் மொத்தம் 15 லட்சம் ரூபாய் முதலில் வாங்கியதாகவும் பிறகு எட்டு லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மீதி 7லட்ச ரூபாயை ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அஜித்திற்கு பிடிக்காத பலர் தல அஜித்தை பற்றி தவறான செய்திகளை கூறிவருகிறார்கள் இருந்தாலும் சிலர் அஜித் அப்படிப்பட்டவர் இல்லை என்று கூறிவருகிறார்கள்.
மாணிக்கம் நாராயணன் பேட்டி ஒன்றில் என்னிடம் ஆதாரம் உள்ளது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தல அஜித் மாணிக்கம் நாராயணனை விரைவில் நேரில் அழைத்து என்ன விஷயம் என்று கேட்க உள்ளாராம். இதற்கு விடை தெரியும் வரை எனக்கு தூக்கம் வராது எனறு தனது நெருங்கிய வட்டாரங்களிடம் அஜீத் கூறியுள்ளார்.