தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிம்பு இவர் ஒரு நேரத்தில் பல்வேறு சர்ச்சையை சந்தித்தது மட்டுமில்லாமல் பல பிரச்சனைகளையும் சந்தித்து வந்தார் அந்த வகையில் இவருடைய சினிமா கேரியரே பாதித்தது மட்டுமில்லாமல் வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார்.
அந்தவகையில் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் நமது நடிகர் தன்னுடைய உடம்பின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார் இதனை தொடர்ந்து அவர் உடல் எடையைக் குறைத்து அதன் பிறகு மாநாடு திரைப்படத்தில் மாசாக இறங்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தினை சுரேஷ் காமாட்சி அவர்கள்தான் தயாரித்துள்ளார். மேலும் இத் திரைப்படம் உருவான நாளிலிருந்து இந்த திரைப்படம் வெளியாகும் நாள் வரை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
இவ்வாறு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக சந்தித்த பல்வேறு பிரச்சினைகளும் திரைப்படம் வெளியான பிறகு அனைத்தும் புஸ்வானம் ஆக மாறிவிட்டது அந்த வகையில் சிம்பு ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் இந்த திரைப்படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.
பொதுவாக பல்வேறு தோல்வியை சந்தித்த நடிகர் சிம்புவுக்கு இந்த திரைப்படம் ஒரு திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வெளியான அனைத்து திரையரங்கிலும் ஹவுஸ்ஃபுல் காட்சியாகவே ஒட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் டெலிட் செய்த சீன் ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவில் நடிகர் சிம்பு பீர் பாட்டிலால் ரவுடிகளின் மண்டையை உடைத்து மாஸ் காட்டுவார்.
மேலும் இந்த வகையான காட்சியானது ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதாக சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார் இதனால் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் ஏனெனில் எப்படிப்பட்ட சூப்பரான இந்த காட்சியை ஏன் திரைப் படத்தில் காண்பிக்கப் படவில்லை என பலரும் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.