வசூலில் சாதனை படைத்த ஜெயிலர்.! ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் என்ன காரியம் செய்துள்ளார்கள் பார்த்தீர்களா.!

jailer
jailer

Jailer Movie: ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ஜெயிலர் படத்தினை அனைவரும் கொண்டாடிய வரும் நிலையில் இதற்காக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் படும் தோல்வினை சந்தித்த நிலையில் இந்த படம் கொடுத்த அனைத்து விமர்சனங்களுக்கும் ஜெயிலர் திரைப்படம் பதில் கொடுத்துள்ளது. அப்படி ஜெயிலர் திரைப்படம் தற்பொழுது வரையிலும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இதன் மூலம் பல கோடி லாபம் கிடைத்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் 3 பேருக்கும் விலை உயர்ந்த கார்களையும், செக்கையும் பரிசாக வழங்கினார்.

இதனை அடுத்து ஜெயிலர் படத்தினை தமிழ்நாட்டில் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தை சார்ந்த இணை தயாரிப்பாளர் சண்முக மூர்த்தி உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தை தொடர்ந்து விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, சுனில், ரெடி கிங்ஸ்லி, ஜாபர் சாதிக், விடிவி கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டங்கள் இணைந்து நடிக்க மேலும் முக்கியமாக சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர்கள் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர்.

இவ்வாறு ஜெயிலர் படத்தின் வெற்றினை தொடர்ந்து த.செ ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 170வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஓய்வு பெற்ற இஸ்லாமிய போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாராம். இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.