அஜித்-பாலா சண்டையின் உண்மை நிலவரத்தை கூறிய தயாரிப்பாளர்.! அந்த ரூமிற்குள் நடந்தது இதுதான்.!

ajith-and-bala
ajith-and-bala

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் கடந்த ஆண்டு நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை. ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து அஜித் அவர்கள் இளம் இயக்குனரான வினோத் அவர்களுடன் கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்கொண்டபார்வை படத்தை இயக்கிய படக்குழுவே இப்படத்தையும் இயக்கி உள்ளனர். அதிலிருந்து சமீபகாலமாக எந்த ஒரு அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் வலிமை படத்தின் இயக்குனரான வினோத் அவர்கள் இப்படம் அடுத்த மங்காத்தா போல இருக்கும் என தெரிவித்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.அதுமட்டுமில்லமால் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் அஜித் பற்றிய செய்திகளை சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் படத்தில் முதலில் அஜீத் அவர்கள் கமிட்டாகி இருந்தார்.

சில பிரச்சனைகள் காரணமாக படத்திலிருந்து அஜித் வெளியேறினார் மேலும் அவர் தாக்கப்பட்டார் என செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருந்தார். அந்த ரூமுக்குள் நானும் இருந்தேன் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை வாக்குவாதம் மட்டுமே நடந்தது, அஜித் வட்டியுடன் பணம் தரவேண்டும் என்றனர் .

அஜித் வாங்கிய அட்வான்ஸ் மட்டுமே தருவேன் என்றார் கடைசியில் அஜித் மிகவும் கோபத்துடன் அதையும் சேர்த்து தந்து விடுகிறேன் என்று கூறி வெளி வந்துவிட்டார். இத்தகைய செய்தி சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.