G. Marimuthu: நடிகர் மாரிமுத்துவின் ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போய்விட்டது என்று தயாரிப்பாளர் மணி கண்கலங்கி பேட்டி அளித்துள்ளார். இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது திரை உலகினர், ரசிகர்களை பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவருக்கு தற்பொழுது 57 வயதாகும் நிலையில் இன்று எதிர்நீச்சல் சீரியலுக்கான டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு வரும்பொழுது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னையில் உள்ள சூர்யா மருத்துவமனையில் தானாகவே வண்டியில் சென்று அட்மிட்டாகி உள்ளார். அங்கு சென்றவுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு மாரிமுத்துவின் இறப்பு சோசியல் மீடியாவில் வைரலாக இதனை நம்பவே முடியவில்லை பிறகு மருத்துவமனையில் இருந்து அவருடைய உடல் வீட்டிற்கு வந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பிறகு தான் இவர் உயிரிழந்தது தெரியவந்தது. இவ்வாறு பல போராட்டங்களுக்கும் பிறகு புகழை அடைந்த மாரிமுத்துவின் ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டதாக இயக்குனர் மணி கூறியுள்ளார்.
துணை இயக்குனராக சினிமா பயணத்தை தொடங்கிய மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் இந்த இரண்டு படங்களும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தினால் வாலி, உதயா, பரியேறும் பெருமாள் போன்ற சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
இதன் மூலம் பிரபலமான இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு எதிர்நீச்சல் சீரியல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த மாரிமுத்து இன்று மரணம் அடைந்திருக்கும் நிலையில் இவர் குறித்து தயாரிப்பாளர் மணி பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த இரண்டு வருடத்தில் அவர் அடைந்த உச்சம் மிகப்பெரியது வீடு கட்ட வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய ஆசை, வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது. இவரின் இந்த திடீர் இறப்பை பார்க்கும் பொழுது நாம் நம் உடல் நலம் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்ற அச்சம் ஏற்படுகிறது என கண்கலங்கி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.