விஜய்யின் வருத்தம் குறித்தும், ப்ரோமோஷன் குறித்தும் லலித்குமார் பேட்டி.! ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்துக்கிட்டு இருக்கு..

vijay
vijay

Thalapathy Vijay: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் வருகின்ற 19ஆம் தேதி அன்று சர்வதேச அளவில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் வெறித்தனமாக காத்து வருகின்றனர். லியோ படத்தின் சூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் ஒரு வழியாக ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட லியோ படத்தின் சூட்டிங் 52 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. இதனை அடுத்து சென்னை, தலகோணம் போன்ற இடங்களிலும் ஷூட்டிங் நடந்தது. லியோ படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜூன் என ஏராளமான மாஸ் கூட்டணியில் லியோ உருவாகியுள்ளது.

இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க விக்ரம் படத்தினை விட வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – திரிஷா கூட்டணி இணைந்திருப்பது மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தோண்டி உள்ளது. தொடர்ந்து லியோ படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், ட்ரெய்லர் என வெளியாகி மாஸ் காட்டி வரும் நிலையில் நேற்று ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த ட்ரெய்லரில் சில கெட்ட வார்த்தைகள் இடம் பெற்று இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்திருக்கும் விஜய் இப்படி பண்ணிவிட்டாரே என கூறி வருகின்றனர். இந்த சூழலில் இயக்குனர் லலித் குமார் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார் அதாவது, குறிப்பிட்ட தேதியில் கண்டிப்பாக லியோ ரிலீசாகும் என்றும் மேலும் விஜய்யும் இதில் உறுதியாகவும், நம்பிக்கை உடனும் உள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள Hyana காட்சி உலக தரத்தில் அமைந்துள்ளதாகவும் இப்படத்தின் மூன்றாவது பாடல் வரும் திங்கட்கிழமை ரிலீஸ் ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அது குடும்ப பாடலாக வெளியாக உள்ளதாகவும் படம் பிஜிஎம் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். சர்வதேச அளவில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ள கோலிவுட் படம் இத்தனை அதிகமான திரையரங்குகளில் வெளியாவது சாதனையாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் யாரும் எதிர்பாராத ஒரு பிரமோஷனை மேற்கொள்ள உள்ளதாகவும் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றும் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்தானதால் விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் இதன் மூலம் ரசிகர்களை பார்க்க முடியாதே என்பது அவரது வருத்திற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளார். படத்தின் புக்கிங் வரும் 15ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.