யோவ் லோகி நீ பாட்டுக்கு கெட்ட வார்த்தை பேச சொல்லிட்ட.. என் கிரகம் இந்த ஆளு கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டிய நேரம்.!

Leo
Leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்து மிரட்டி வருகிறார் விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து லியோ திரைப்படத்தை எடுத்துள்ளார் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளது. படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத்..

அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி, த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது அண்மையில் டிரைலர் வெளிவந்து மிரட்டிய நிலையில் படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கர்நாடகாவில் அதிக வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்கள்.! அஜித், விஜய்க்கு இடமில்லை

படம் வெளிவர இன்னும் சில தினங்களில் இருப்பதால் லியோ டீம் பம்பரம் போல பிரமோஷன் வேலைகளை பார்த்து வருகிறது ரத்தினகுமார் தொடங்கி படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அனைவருமே பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் சில மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. லியோ டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு பலரும் விமர்சித்து வருகின்றனர் ப்ளூ சட்டை மாறன் தொடங்கி தயாரிப்பாளரும், நடிகருமான கே ராஜன்  விஜய்யை விமர்சித்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

எப்ப வெங்கடாஜலபதி எப்படியாவது படத்தை ஓட வச்சிடு. ! திருப்பதியில் மையம் கொண்ட லியோ பட குழு.!

கெட்ட வார்த்தைகளை கேடுகெட்டவனில் கேவலமானவன் தான் பேசுவான்.. தலைவராக வரப் போகிறவன் என்ற எண்ணம் உடையவர் இப்படி கூறுவது சரியா.? இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை வைத்தால் வாழ்க்கையில் சறுக்கி விடுவாய்.. “இது தமிழ்நாடு” என கே ராஜன் விமர்சித்துள்ளார். இந்த செய்தி சோசியல் மீடியா பக்கத்தில் பூதாகரமாக விடுத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.