விஜயைப் பார்த்து கத்துக்கோங்க என தெலுங்கு நடிகர்களுக்கு அறிவுரை கூறிய பிரபல தயாரிப்பாளர்.!

vijay-1
vijay-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என பலரும் கூறிய நாம் கேட்டிருக்கிறோம். அந்த வகையில் துணை நடிகர்கள் முதல் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யும் அனைவரிடமும் மிகவும் ஜாலியாக பேசி பழகுபவர். இவர் எளிமையாக இருப்பதால் அனைவருக்கும் அவரிடம் பேசுவதற்கு மிகவும் ஜாலியானதாக இருக்கும்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் தில்ராஜ் தயாரிப்பில் வம்ச இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களைத் தொடர்ந்து சரத்குமார்,பிரபு,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடத்து வருகின்றனர்.

இவ்வாறு நட்சத்திர பட்டாளங்கள் ஒன்று கூடி நடித்து வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற வருகிறது மேலும் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலைகள் சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு நடிகர் விஜய் குறித்த தகவலை வெளியிட்டு தெலுங்கு சினிமா நடிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அதாவது தெலுங்கு சினிமா பொருத்தம் வரை பிரபல நடிகர்கள் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு தனி விமானம் கேட்பார்களாம் மேலும் வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர்களும் அதிக செலவு செய்து இவர்களிடம் தனி விமானத்தை ரெடி செய்து கொடுப்பார்களாம். விஜய் அப்படி எல்லாம் கிடையாது பெரிய நடிகரான விஜய் நினைத்தால் தனி விமானத்தில் போகலாம் ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் அனைவரும் செல்கின்ற விமானத்தில் ஹைதராபாத் வந்து படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்று விடுகிறாராம் எனது இவ்வளவு எளிமையாக இருக்கும் விஜய் பார்த்து தெலுங்கு நடிகர் கற்றுக் கொள்ளுங்கள் என வெளிப்படையாக புகழ்ந்து பேசி உள்ளார் தில்ராஜ்.

இவ்வாறு தற்பொழுது தெலுங்கு நடிகர்கள் மத்தியில் இது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் பல கோடி செலவு செய்யப்படுகிறதாம் முக்கியமாக நடிகர்களுக்கு தான் தேவையான அனைத்தையும் செய்யப்பட்டு வருகிறது எனவே தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஏராளமான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட இருந்தது.