சூர்யாவை குறைத்துக் காட்ட சிவகார்த்திகேயன் பல முயற்சிகளை செய்து வருவதாக தொடர்ந்து தவறான தகவல்களை பலரும் பகிர்ந்து வருவதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் அஜித், விஜய் தான். மூன்றாவது இடத்தில் சூர்யா இருந்து வருகிறார் இந்நிலையில் அஜித் விஜய் அடுத்து சிவகார்த்திகேயன் தான் என சமீப காலங்களாக பேச்சுகள் கிளம்பி வருகிறது. எனவே இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதாவது கடந்த 2002ஆம் ஆண்டு இது ஆரம்பித்துவிட்டது அஜித் விஜய் பெரிய இடத்திற்கு சென்று விட்டார்கள் இருவரும் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து டாப்புக்கு வந்து விட்டார்கள் அந்த நேரத்தில் சூர்யாவிற்கு படங்கள் ஹிட் கிடைக்கவில்லை அதற்கு பிறகு ஹிட் படம் என்றால் காக்கா காக்க படத்திலிருந்து ஆரம்பித்தது.
அதன் பிறகு பெரிய ஹிட் படம் என்றால் சிங்கம் தான் சிங்கம் வருவதற்குள் அஜித்தும் விஜய்யும் பெரிய லெவலுக்கு சென்று விட்டார்கள். அதனால் சூர்யாவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்தது அந்த முதல் இரண்டு இடங்களில் வேறு யாராலும் வர முடியவில்லை அந்த மூன்றாவது இடத்தையும் நான் முதல் மற்றும் இரண்டாவது இடம் போன்று தான் பார்க்கிறேன்.
சூர்யாவுக்கு டிஜிட்டல் மார்க்கெட் பெருசு தியேட்டர் பிசினஸ் தான் ஒரு சின்ன பின்னடைவு உள்ளது ஒரு படம் வந்தால் அது மாறிவிடும் அதை கங்குவா செய்யும் என நம்பிக்கை இருக்கிறது அது தியேட்டர்களில் பிளாக்பஸ்டராக மாறினால் சூர்யாவுக்கு பிரச்சனை தீர்ந்துவிடும் சிவகார்த்திகேயன் மூன்றாவது இடத்திற்கு வந்து விடுவார் என சில பொய்யான தகவல்களை ஊடகங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறது.
எனக்கு அது வருத்தமாக இருக்கும் அது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவது ரொம்ப தவறு சூர்யாவை குறைத்துக் காட்டவே இப்படி பண்ணுகிறார்கள். அது ரொம்ப தப்பு நான் சிவகார்த்திகேயனை குறைத்து மதிப்பிடவில்லை நான்காவது இடம் என்றால் ஒப்புக் கொள்வேன் ஆனால் நான்காவது இடத்தில் தனுஷ் டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
வேண்டுமென்று சிவகார்த்திகேயனை உயர்த்தி பிடிக்க பண்ணுகிறார்கள் சில ஊடகங்களை அப்படி செய்ய வைக்கிறார்கள. முதல் மூன்று இடங்கள் என்றால் அது அஜித், விஜய், சூர்யா தான் அதில் யாருமே நுழைய முடியாது சூர்யாவுக்கு அதிக கிரேஸ் இருக்கிறது படங்கள் அமைய வேண்டும் அப்படி அமையாவிட்டால் டாப் 2ல் டஃப் கொடுக்க முடியும். மேலும் சூர்யாவின் பிசினஸ் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி அமோக வெற்றியை பெற்ற திரைப்படம் தான் சூரரை போற்று இந்த படம் மிகப்பெரிய வெற்றினை கண்டாலும் ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த படம் தியேட்டரில் வெளியாகியிருந்தால் சூர்யாவின் நிலைமை வேறு லெவலுக்கு சென்றிருக்கும் என தனஞ்செயன் தெரிவித்துள்ளார். தற்பொழுது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.