இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஒரு சில பிரச்சனையின் காரணங்களால் பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இந்த படத்தை தற்போது கையில் எடுத்துள்ளனர்.
இந்தியன் 2 திரைப்படம் தற்போது சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படபிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது இதில் உலகநாயகன் கமலஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் படபிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்தியன் 2 படத்தை விரைவில் எடுத்து முடிக்க இயக்குனர் சங்கரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் இயக்குனர் சங்கர் அவர்கள் தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதனால் இரண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொள்வது மிகவும் கஷ்டமாக உள்ளதாலும் நடிகர் கமல்ஹாசன் தற்போது மாதம் 10 நாட்கள் மட்டும் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு கால் ஷிட் கொடுத்துள்ளதாலும் தற்போது இயக்குனர் சங்கர் அவர்களுக்கு இது ஒரு சேலஞ்சராக அமைந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருவதாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது துவங்க உள்ளதால் மாதம் 10 நாட்கள் மட்டும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு கால் ஷிட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இயக்குனர் சங்கர் அவர்கள் ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது அதாவது தான் இயக்கம் இந்தியன் 2 திரைப்படத்திற்கு மூன்று இயக்குனர்களை களமிறக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்திற்கு அறிவழகன், வசந்த பாலன், சிம்பு வாசுதேவன் ஆகிய மூன்று இயக்குனர்களையும் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு வாசுதேவன் அவர்கள் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற திரைப்படங்களில் இயக்கியவர்.
இயக்குனர் அறிவழகன் ஈரம், குற்றம் 23, போன்ற படங்களை இயக்கியுள்ளார், மேலும் இயக்குனர் வசந்தபாலன் அரவான், வெயில், அங்காடி தெரு, போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படி திறமையான இயக்குனர்களை வைத்து தனது படத்தை எடுக்க திட்டம் திட்டி உள்ளார் இயக்குனர் சங்கர்.