தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி தற்போது தனியாக ஒரு youtube சேனலை ஓப்பன் செய்து அதில் சினிமாவிற்கு பின்னால் நடக்கும் அந்தரங்க விஷயங்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
அந்த வகையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான இரவு நிழல் படத்தில் நடித்த ரேகா நாயரை பற்றி கேவலமாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை நேரடியாக சந்தித்து லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார்.
இப்படி பல நடிகர்கள் மற்றும் பிரபலங்களை பற்றி கேவலமாக பேசி அவர்களிடம் திட்டு வாங்கி வருகிறார் ரங்கநாதன். இதனை தொடர்ந்து நடிகை திரிஷாவையும் பயில்வான் ரங்கநாதன் கேவலமாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அதாவது திரிஷா எதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று கேட்டதற்கு தற்போது திரிஷா அவர்கள் அதிகமாக குடிப்பழக்கம் வைத்திருப்பதால் தான் திருமணத்தை தள்ளி போட்டு வருகிறார். 40 வயதை நெருங்கிய திரிஷா குடிப்பழக்கம் அதிகமாக கொண்டிருப்பதாகவும் திருமணம் செய்து கொண்டால் எங்கு குடிக்க முடியாது என்று எண்ணிதான் திருமணத்திற்கு அவர் நோ சொல்லுகிறார் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது திரிஷா நடிப்பில் வெளியான ராங்கி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் திரிஷா அவர்கள் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் அந்த வகையில் ஒரு பேட்டியில் சினிமாவில் இது போன்ற கிசுகிசு பேசுபவர்களை பற்றி கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த நடிகை திரிஷா அவர்களெல்லாம் திமிரு பிடிச்சவங்க தேவையில்லாமல் ஏதாவது பேசி இரு தரப்பினருக்கு இடையே சண்டையை மூட்டி விடுவார்கள் என்று பயில்வான் ரங்க நாதனை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் நடிகை திரிஷா.