பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்ங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் எந்த பிரச்சினை வந்தாலும் விட்டுக்கொடுக்காமல் விளையாண்டு வந்த மூவர் அணிக்கு தற்போது ஒரு பிரச்சனை வந்துள்ளது. பொதுவாக பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கொடுக்கும் டாஸ்க் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிரச்சினைகள் உருவாகும்.
இந்நிலையில் தற்போது நிரூப், மற்றும் அபிஷேக் ஆகிய மூவருக்கும் பிரச்சனை உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் பிரியங்கா குறும்படம் போட சொல்வது மட்டுமில்லாமல் இந்த பிக்பாஸ் விட்டு வெளியேற முடிவு எடுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பாக பிக்பாஸ் வீட்டில் பிரேக்கிங் நியூஸ் டாஸ்க் நடைபெற்று வந்தது அதில் நிரூப்பை அபிஷேக் மற்றும் பிரியங்கா மிகவும் செமையாக கலாய்த்து இருப்பார்கள் இதனால் கடுப்பான நிரூப் பிரியங்கா மற்றும் அபிஷேக் மீது கோபம் கொண்டு மிக கடுமையாக பேசியுள்ளார்.
நிரூப் பிரியங்காவிடம் ஆவேச பட்டதன் காரணமாக அபிஷேக் நான்தான் உன்னை கலாய்த்தல் எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசு ஏன் அவளிடம் கத்திக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளார் அந்த வகையில் நாங்கள் கலாய்ப்பது போல் உனக்கு தெரிந்து இருந்தால் உடனே நீ எங்களிடம் கூற வேண்டியது தானே என்று அபிஷேக் கேட்டிருந்தார். மேலும் என் மீது ஏதேனும் குற்றம் இருந்தால் நான் வெளியே போகவும் தயார் என்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
இந்நிலையில் யாராலும் பிரிக்க முடியாமல் இருந்த எந்த அணி தானாகவே தற்போது பிரிந்துள்ளது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பேசப்பட்டது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
#Day61#Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/rzEj8dEIvl
— Vijay Television (@vijaytelevision) December 3, 2021