பொதுவாக வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து தங்களுக்கென்ன ஒரு இடத்தை உருவாக்கி விடுகிறார்கள். மேலும் இவர்களை தொடர்ந்து பார்ப்பதனாலோ என்னவோ இவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது அப்படி தற்பொழுது சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகைகள் பிரியங்கா நல்காரி.
அதாவது சமீப காலங்களாக சன் தொலைக்காட்சி தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி டிஆர்பி யில் டாப்பில் இருந்து வந்த தொடர் தான் ரோஜா இந்த சீரியலின் மூலம் புதுமுக நடிகரான சிப்பு மற்றும் நடிகை பிரியங்கா இருவரும் அறிமுகமானவர்கள்.
இந்த சீரியலில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக அமைய ரசிகர்களின் ஃபேவரட் ஜோடியாக வலம் வந்தனர். மேலும் ரோஜா தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த வருடம் தான் நிறைவடைந்தது இந்த ரோஜா சீரியலுக்கு பிறகு பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இடையில் தனது நீண்ட நாள் காதலரை திடீரென மலேசியா கோவிலில் மிகவும் சிம்பிளாக திருமணம் செய்த கொண்டார் எனவே இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். இவ்வாறு இதன் காரணமாக தனது சீதா ராமன் தொடரிலிருந்து இவர் விலகுவதாக பதிவிட்டிருந்த நிலையில் சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலானது.
எனவே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் பலரும் சோகமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இவ்வாறு சீதா ராமன் கெட்டப்பில் கடைசி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் நல்ல கதாபாத்திரம் மிகவும் அருமையாக நடித்து வருகிறீர்கள் ஏன் இப்படி திடீரென விலகுகிறீர்கள் என கூறி வருகிறார்கள். இவ்வாறு சீதா ராமன் சீரியலில் இதற்கு மேல் பிரியங்கா நல்காரிக்கு பதிலாக வேறு நடிகை அறிமுகமாகுவார்.