தமிழ் சினிமாவில் எத்தனையோ புதுமுக நடிகைகள் அறிமுகம் ஆகிறார்கள். அவர்கள் சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார்களா என்று கேட்டால் சில நடிகைகள் பயணித்தாலும் சில நடிகைகள் பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வருகிறார்கள் அந்த வகையில் பிரியங்கா மோகன் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே முன்னணி நடிகைகளுக்கான இடத்தை பிடித்து விட்டார்.
இவர் சினிமாவில் முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் நாணீக்கு ஜோடியாக கேங்க்லீடர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன் முதலாக என்ட்ரி கொடுத்தார். தான் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியதால் இவரை பல இயக்குனர்கள் தங்களுடைய படத்தில் புக் செய்ய ஆரம்பித்தார்கள்.
அதேபோல் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே க்யூட்டான அழகான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் இதனை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தார் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் திரைப்படத்தில் தன்னுடைய க்யூட் ரியாக்ஷன் ஆனால் மேலும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார் டான் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அது மட்டும் இல்லாமல் டாக்டர் திரைப்படமும் டான் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.
இதாலையில் தற்பொழுது துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன் அதுமட்டுமில்லாமல் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது பஞ்சுமிட்டாய் போல் உடைய அணிந்து ரசிகர்களை வாட்டி வதைத்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் பளிங்கு கற்கள் போல் மின்னுகிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.