தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை அடுத்து நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி மூன்று திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மிலர் திரைப்படத்தில் கமிட் ஆகி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி தமிழில் அறிமுகமான முதல் படத்தில் இருந்து பிஸியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறதாக கூறப்படுகிறது.
குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கி வருகிறார் நடிகை பிரியங்கா மோகன். மூன்று படத்தில் நடித்து முன்னணி நடிகை ரேஞ்சுக்கு பிஸியாக இருக்கிறார். மேலும் நடிகை பிரியங்கா ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஆனால் இவருக்கு முன்பாக வந்த ஒரு சில நடிகைகளுக்கு பட வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை என்று ஊடகங்களில் கூறி வருகிறார்கள்.