பொதுவாக சினிமாவில் தயாரிப்பாளர் இயக்குனர்கள் நடிகைகள் என ஏதாவது பிரச்சினை ஏற்படுவது வழக்கம். அதிலும் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தன் படத்தில் நடிக்கும் நடிகைகள் மீது ஆசை படுவது வழக்கம்.
அதிலும் பாலிவுட்டில் சொல்லவே வேண்டாம் படத்தில் நடிக்கும் நடிகையை ஒருமுறையாவது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் மோசமான சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இதனால் பாலிவுட்டில் அடிக்கடி பஞ்சாயத்து நிலவி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை போதை பழக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு இரவு பார்ட்டிகளுக்கு அழைத்துச் செல்வது என சகலமும் நடக்கும். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் வரை கொடிகட்டிப் பறந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா.
தற்போது இவர் சூப்பர் ஸ்டார் நடிகையாக மாறி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிகட்டி பறந்து வருகிறார். இவருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு பெரிய பாலிவுட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரியங்கா சோப்ராவை அணுகி உள்ளார்கள். அந்தப் பாடலில் மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆட வேண்டும் அது மட்டுமில்லாமல் அந்த பாடலுக்கு குறிப்பிட்ட அளவுதான் உடை இருக்க வேண்டும் எனவும் கண்டிஷன் இருந்தது.
அதற்கு ஒப்புக்கொண்டு பிரியங்கா சோப்ராவும் நடனம் ஆட சம்மதித்தார். அந்த பாடலில் பிரியங்கா சோப்ரா ஒவ்வொரு காட்சியிலும் உடையை கழட்டுவது போல் இருக்கும். அந்தப் பாடலின் நீளம் அதிகமாக இருந்ததால் இயக்குனரிடம் சென்று பிரியங்கா சோப்ரா பாடலின் இறுதியில் கண்டிப்பாக ஒட்டுத் துணியில்லாமல் நிற்க வேண்டும் அதனால் வேறு ஏதாவது செய்யுங்கள் என கூறியுள்ளார்.
உடனே இயக்குனர் பிரியங்கா சோப்ரா விடம் ஸ்டைலிஸ்ட் அவர்களிடம் கேளுங்கள் என கூறிவிட்டார் ஆனால் அந்த இயக்குனர் ஸ்டைலிஷ் இடம் பாட்டின் இறுதியில் குறைந்தது உள்ளாடை ஆவது தெரிய வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார். இதை பிரியங்கா சோப்ரா முன்னிலையில் கூறியதால் செம டென்ஷனாகி விட்டார்.
உடனே அந்தப் படத்தை விட்டு விலக முடிவு செய்தார் பிரியங்கா சோப்ரா ஆனால் தயாரிப்பாளர் பிரியங்கா சோப்ராவின் மார்க்கெட்டை நினைவில் வைத்துக் கொண்டு இந்த பிரச்சனையை சல்மான்கானிடம் முறையிட்டுள்ளார். அதன்பிறகு சல்மான்கான் இந்தப் பிரச்சினையை முடித்து வைத்தார்.