கிசுகிசுவுக்கு பயந்து ரஜினி படத்தை நிராகரித்த “பிரியங்கா அருள் மோகன்” – அவருக்கு பதில் நடிக்கப் போவது யார் தெரியுமா.?

jailer
jailer

இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ரஜினிக்கு 169 திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகிய வருகிறது இந்த படத்தில் ரஜினி ஒரு வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார.

இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் பொழுதே ரஜினியின் போட்டோக்கள் லீக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தடுக்க படக்குழு பல்வேறு யுகங்களை வகுத்து படத்தின் சூட்டிங் எடுத்து வருகிறதாம்.

இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து  ரம்யா கிருஷ்ணன், விநாயகன், கன்னட டாப் நடிகர் சிவ ராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த ரவி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் ஹீரோயின் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பார் என தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.

ஆனால் தற்பொழுது கிடைத்துயுள்ள தகவல் என்னவென்றால் ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நடிக்கவில்லையாம்.. காரணம் கிசுகிசு பயந்து அவர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது அவருக்கு பதிலாக தான் நடிகை தமன்னாவை படக்குழு புக் செய்து உள்ளதாம். ஆனால் இந்த படத்தில் தமன்னாவுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பது இதுவரை தெரியவில்லை.

ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமன்னா தமிழில் பட வாய்ப்பு கைப்பற்றி உள்ளார். இந்த படம் அவருக்கு வெற்றி பெறும் பெற்றதில் விட்ட இடத்தை அவர் பிடிக்க கூடும் அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்பை அள்ளுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.