வெள்ளித்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பது தான் தளபதி விஜய் இவர் நடிப்பில் எந்த திரைப்படங்கள் திரையரங்குக்கு வந்தாலும் இவரது ரசிகர்கள் அந்த படத்திற்காக நல்ல விமர்சனத்தை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
அந்த வகையில் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
இதனை அடுத்து தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் வெளியிடப்பட்டது.
மேலும் விஜயுடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தமிழன் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பிரியங்கா சோப்ரா.
இதன்பின்பு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து இவர் பாலிவுட்டுக்கு மாறிவிட்டார். அந்தவகையில் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் போது விஜய்யும் பிரியங்கா சோப்ராவும் ஒரு பாடலை பாடியிருப்பர்கள்.
அந்த படத்தில் உள்ளதை கிள்ளாதே என்ற பாடலை இருவரும் இணைந்து பாடினார்கள் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்