ரசிகர்களை ஷாக் ஆக்கிய பிரியாமணி !! மீண்டும் அதிரடியான கதாபத்திரத்தில் நடிக்கிறார் !!

priyamani
priyamani

Priyamani shocked fans Again playing the stunning character: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவர் ப்ரியாமணி. இவர் கண்களால் கைது செய் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் அதனைத்தொடர்ந்து அது ஒரு கனா காலம், மது, பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா போன்ற பல படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக பருத்திவீரன் படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிகொண்டார்.

இவர் பருத்திவீரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது, பிலிம்ஃபேர் விருது மற்றும் தமிழ்நாடு மாநில விருது போன்ற பல விருதுகளைப் பெற்றார். பின்னர் இவர் பிற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். அதனை தொடர்ந்து தற்போது இவர் தெலுங்குவில் அசுரன் பட ரீமேக்கில் வெங்கடேஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தை ஏற்று இவர் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

பின்னர் அதனைத்தொடர்ந்து விராட பருவம் 1992 என்ற வரலாற்று படத்தில் பாகுபலி வில்லன் ராணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம் . மேலும் இது உண்மை சம்பவக் கதையை கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ஆகுமாம். இவர் நடித்து வரும் இந்த கதாபாத்திரத்தை பல ஹீரோயின்களும் ஏற்று நடிக்க மறுத்தார்கள். ஏனென்றால் இதில் அவர் நக்சலைட் ஆக நடிக்க வேண்டியதாக உள்ளதாம்.

மேலும் பிரியாமணி இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டது ரசிகர்களுக்கு பெரிதும் ஷாக்காகி உள்ளதாம். இருந்தாலும் சிலர் இவர் இது போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிக்காட்டுவதில் வல்லவர் என்றும் கூறியுள்ளார்களாம்.