கணவனுடன் கட்டியணைத்தபடி புகைப்படம் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியாமணி..!

priyamani-3

சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார் அந்தவகையில் இவரை ரசிக்காத ரசிகர்களே கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடிகர் கார்த்திக் உடன் இணைந்து பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு உருவான இத்திரைப்படம் ஆனது கிராமத்து பங்கில் வெளியான திரைப்படமாக இருந்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது.

அந்த வகையில் இத் திரைப்படத்தில் நடிக்க நடிகை பிரியாமணி ஆரம்பத்தில் வருத்தப்பட்டாராம் ஆனால் இத்திரைப்படம் வெளியான பிறகு அவருக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் குவிந்தது மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் கொடுத்து கௌரவித்தது.

பின்னர் தமிழ் சினிமாவில் இவருக்கு தொடர் கிராமத்து கதாபாத்திரம் கொடுப்பதன் காரணமாக வேற்று மொழியில் திரைப்படங்கள் நடிக்க சென்றுவிட்டார் இது ஒரு பக்கம் இருக்க பிரியாமணியின் சொந்த வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் நடிகை ப்ரியாமணி கணவர் முஸ்தபா ராஜ்க்கும் அவருடைய முதல் மனைவிக்கும் முறைப்படி விவாகரத்து நடக்கவில்லை என்று ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறு எழுந்த சர்ச்சையின் பிறகு பிரியாமணி உடன் இணைந்து வாழாமல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து பிரியாமணி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் என் கணவர் என்னை பிரிந்து விடவில்லை கண்டிப்பாக திரும்பி என்னிடம் வருவார் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தீபாவளியோட்டி தனது கணவர் முஸ்தபா உடன் நடிகை பிரியாமணி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

priyamani-2
priyamani-2

அதுமட்டுமல்லாமல் பிரியாமணியும் அவருடைய கணவரும் பிரிந்து வாழ்கிறார் என்ற வதந்திக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது.