தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அல்லு அர்ஜுன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை அடுத்த பாகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது பலருடைய ஆசை.
அந்த வகையில் இந்த ஆசை நிறைவேறிய நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்க படகுழுனர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் பட குழுவினர்கள் தற்பொழுது தேர்வு செய்யும் நிலையில் இருப்பது மட்டுமில்லாமல் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு அதிக அளவு முக்கியதுவம் கொடுத்த வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களையும் மிகவும் ஆண்டு ஆராய்ந்து அதன் பின்னரே தேர்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்க உள்ளார். இவ்வாறு வெளிவந்த இந்த செய்தியின் மூலமாக ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
இதனை தொடர்ந்து மற்றொரு நல்ல செய்தியும் வெளிவந்துள்ளது அதாவது மற்றொரு கதாபாத்திரத்தில் பிரபல தேசிய விருது பெற்ற நடிகை ஒருவர் நடிக்க உள்ளாராம் அவர் யாரும் கிடையாது கார்த்திக் நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பிரியாமணி தான்.
நமது நடிகைக்கு கிராமத்து கதாபாத்திரம் கொடுத்தால் போதும் தட்டி தூக்கி விடுவார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் அவருக்கு புஷ்பா இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் பிரியாமணி இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்க உள்ளார் என மற்றொரு செய்தியும் வெளியாகி உள்ளது இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருப்பது மட்டுமில்லாமல் பிரியாமணி நடிப்பை பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.