செய்தி வாசிப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.
இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் மேயாதமான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.இத்திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனக்கென உருவாக்கியவர்.
அந்த வகையில் ரசிகர்களும் இவர் அழகில் மயங்கி இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இவர் நடிப்பில் சில படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் நடிகர் யோகிபாபுவிற்கு தனது அன்பை அள்ளி கொடுத்துள்ளார். அந்த வகையில் நடிகர் யோகிபாபு நடித்திருந்த மண்டேலா திரைப்படம் சமீபத்தில் நெட் பிலிம்ஸ் நிறுவனம் OTT வழியாகவும் மற்றும் தொலைக்காட்சிகளின் மூலம் வெளிவந்தது.
இத்திரைப்படத்தில் ஷீலா ராஜ்குமார் சங்கிலி முருகன், ஜார்ஜ் மரியான் தீபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் யோகி பாபுவை பாராட்டிய இருந்தார்கள். அந்த வகையில் தற்போது அன்பை வாங்கிக்கங் அண்ணா என்று கூறி இன்னும் சில வரிகளுடன் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் பிரியா பவானி சங்கர்.