தினமும் மேக்கப் போட்டோ ஷூட் உங்களுக்கு போர் அடிக்கலயா என்ற நெட்டிஷனுக்கு நெத்தியடி பதில் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் பல்வேறு நடிகைகள் வெள்ளித்திரையில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் இவர் முதன்முதலாக தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு தன்னுடைய திறமையின் மூலமாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து பிரபலமான நமது நடிகை மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வ போது தன்னுடைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்தான் இந்நிலையில் தான் வெளியிட்ட புகைப்படத்திற்கு கேப்ஷனாக திங்கள்கிழமை யாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை போல இருங்கள் என ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார்.

வாரத்தின் முதல் நாளில் வேலைக்கு செல்லும் போது மன கஷ்டத்துடன் செல்வோம் அதே வெள்ளிக்கிழமை செல்லும்பொழுது இரண்டு நாட்கள் விடுமுறை என்ற மகிழ்ச்சியுடன் செல்வோம் இதனால்தான் பிரியா பவானி சங்கர் இப்படி ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார்.

அந்த வகையில் இவர் வெளியிட்ட பதிவினை சிலர் லைக் செய்தாலும் ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள் அந்த வகையில் டுவிட்டர் வாசி ஒருவர் தினமும் ஹேர்ஸ்டைல் செய்து கொண்டு மேக்கப் போட்டுக்கொண்டு  புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது உங்களுக்கு போரடிக்காதா என கேட்டுள்ளார்

அதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர் நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகப் புரிகிறது எனக்கு கண்டிப்பாக போர் அடிக்காது ஏனெனில் தான் செய்யும் வேலைக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கும் பொழுது  இப்படிப்பட்ட எண்ணம் எனக்கு தோன்றாது என பதிலளித்துள்ளார்.