செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை ஆரம்பித்து பிறகு சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இதுதான் அவரின் முதல் சிறியதாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து கதாநாயகியாக மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார் ஆனால் எந்த படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்தவகையில் பிரியா பவானி சங்கரும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
இதன் மூலம் இவர் தற்பொழுது பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் சினிமாவில் 20 ஆண்டு காலங்களாக உச்ச நட்சத்திரமாக குறித்து வரும் திரிஷா மற்றும் நயன்தாரா போன்ற நடிகைகளைப் போல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
அந்தத் திரைப்படத்தில் ரிப்போர்ட்டராக பணியாற்றிவரும் பிரியா பவானி சங்கர் கொலைகாரன் ஒருவனை போலீஸ் தேடுகிறார்கள் அவருக்கு உதவி செய்வது போல நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை நடிகை நயன்தாரா நடித்த ஐரா திரைப்படத்தை இயக்கிய சர்ஜின் இயக்க உள்ளாராம்.
மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம். நடிகர் மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தற்பொழுது உள்ள முன்னணி நடிகர்கள் அளவுக்கு பிரியா பவானி சங்கர் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் ருத்ரன்,இந்தியன் 2, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பத்து தல, அருண்விஜய் 33, பொம்மை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வளர்ந்துள்ள முன்னணி நடிகைகளுக்கு கொடுத்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.
இவர் நடித்து வரும் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை எனவே ரசிகர்கள் அனைவரும் இவரின் படத்திற்காக காத்து வருகிறார்கள்.