80,90 காலகட்டத்தில் நடிகர், நடிகை உள்ளே நுழைய வேண்டுமென்றால் ஆடிஷன் வைத்து அதில் தனது திறமையை சிறப்பாக வெளி காட்டுவார்களே சினிமாவுலகில் உள்ளே நுழைய முடியும். அந்த காலம் மாறிப்போய் தற்பொழுது உள்ளது மாடலிங் துறையில் இருப்பவர்கள் செய்தி வாசிப்பாளர் வீடியோக்களில் தனது திறமையைக் காட்டுவார்கள் தான் சினிமாவில் வாய்ப்புகள் கொடுத்து அழகு பார்க்கபடுகிறது.
அந்த வகை யில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்தவர் பிரியா பவானி சங்கர் ஆள் பார்ப்பதற்கு அழகாகவும், இவரது பேச்சுத் திறமை கவரும்படி இருந்ததால் இவர் செய்து வாசிப்பாளராக இருக்கும்போதே ரசிகர்களை கவர்ந்து இழுத்தார் மேலும் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.
முதலாவதாக இவர் மேயாதமான் என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். முதல் நல்ல வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது படங்கள் அடுத்தடுத்து கிடைத்தாலும் அந்த படங்கள் வெற்றியை ருசித்தது இல்லையோ இவரது திறமையை பெரிய அளவில் பேசப்பட்டது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
அதற்கு ஏற்றார்போல சம்பளத்தையும் அதிகரித்து கொள்ளாமல் படங்களில் நடிப்பதை மட்டுமே கவனம் செலுத்தி வருவதால் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்த நடிகையாக மாறியுள்ளார். கடைசியாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ஓ மண பெண்ணே,பிளட் மணி ஆகியவை வெளிவந்து அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
2022 -நல்ல ஆண்டாக அமைய இருக்கின்றன. இவரது கையில் புதிய படங்கள் மட்டுமே சுமார் 9 இருக்கும் என தெரியவந்துள்ளது அதிலும் குறிப்பாக இந்தியன் 2, குதியாட்டம், யானை போன்ற படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பிரியா பவனி சங்கர் பொங்கல் வைக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..