நடிகர் உலகில் வளர்ந்து வரும் நடிகரான விஷால் ஆரம்பத்திலேயே காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கு தொடர்ந்து ஹிட் படங்களாகவே அமைந்தன இப்படி இருந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் கலந்து அதில் வெற்றியை ருசித்தார்.
அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த திரைப்படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி ஹிட் அடிக்காமல் இருந்ததால் தற்போது சினிமா உலகில் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழும்பியது மேலும் இவர் நடிப்பில் கடைசியா சக்ரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதைத் தொடர்ந்து அவர் துப்பறிவாளன் 2, ஏனிமி போன்ற அடுத்தடுத்த நம்பி தான் விஷால் இருக்கிறார்.
இத்திரைப்படங்களை அவருக்கு வெற்றியை கொடுத்தால் மட்டுமே சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்பது அவர் அறிந்திருப்பார் அதனால் அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி தற்போது வெற்றியை கொடுக்க கடுமையாக முயற்சிக்கிறார் இப்படி இருக்க விஷால் அடுத்ததாக கார்த்தி இயக்கும் ஒரு புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக யார் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஆட்சி செய்து வரும் ப்ரியா பவானி சங்கர் தான் இந்த திரைப் படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்த சமூகவலைத்தள பக்கத்தில் அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் விஷாலின் 31 வது திரைப்படத்தில் நடிக்கிறார் என கேட்டதற்கு நடிகர் விஷாலும், இயக்குனர் கார்த்திக்கும், நானும் தங்களை தங்களின் அன்புக்கு உரியவர்களை பாதுகாக்கும் முயற்சியில் உள்ளோம். கொரோனா நிலைமை சரியானதும் பிறகே வெளியாகும் என பதில் கொடுத்தார் நடிகை பிரியா பவானி சங்கர்.