வருடத்திற்கு ஐந்து, ஆறு படங்களை கைப்பற்றி நடித்து வருபவர் ப்ரியா பவானி சங்கர். இவர் முதலில் மேயாத மான் என்னும் படத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடித்ததால் இவருக்கான வரவேற்பு அதிகரித்து காணப்பட்டது 2023ல் கூட இவருக்கு சுமார் பத்து படங்கள் இருந்தன.
அதில் 4, 5 படங்கள் வெளிவந்த நிலையில் தற்பொழுது கமலின் இந்தியன் 2, இயக்குனர் ஹரி இயக்கும் ஒரு படத்திலும், டிமான்டி காலனி மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் இவர் நடித்து வருகிறார். திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடும் ப்ரியா பவானிசங்கர் சம்பாதிக்கும் காசுகளை அடுத்தடுத்து சரியாக பயன்படுத்தி வருகிறார் ஆம் முக்கிய இடங்களில் வீடு மற்றும் ஹோட்டல்களை நிறுவி வருகிறார்.
இப்படிப்பட்ட ப்ரியா பவானிசங்கர் ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் வகையில் சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமர் மற்றும் மார்டன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து இழுத்து வருகிறார் அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலானது.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த இரண்டு இயக்குனர்கள் அழைத்தால் கதை கேட்காமலேயே படங்களில் நான் நடிக்க ரெடி என கூறி இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் தன்னை அழைத்தால் கதை கேட்காமல் கூட நடிப்பேன் என கூறினார்.
மேலும் பேசிய அவர் மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழைத்தாலும் அதே போல கதை கேட்காமலேயே அந்த படத்தில் நடிக்க ஓகே சொல்வேன் என கூறியிருக்கிறார் விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் எப்படியோ பிரம்மாண்ட இயக்குனருக்கு தற்பொழுதே அடிபோடுறீங்க என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.