தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் படவாய்ப்புகள் குறைந்து விட்டால் சீரியல் பக்கம் தலை காட்டுவார்கள். அதிலும் குறிப்பாக நடிகைகளுக்கு பட வாய்ப்பு இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக சீரியலில் தான் நடித்து வருகிறார்கள்.
ஆனால் சமீபகாலமாக தற்போது சீரியலில் நடித்து வரும் நடிகைகள் பலரும் சினிமாவில் கால் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் தொகுப்பாளினிகள் செய்தி வாசிப்பாளர் என பலரும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலை தொடர்ந்து மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக கால் தடம் பதித்தார்.
மேலும் இவரை ரசிகர்கள் ஹீரோயினாக ஏற்றுக்கொண்டதால் அடுத்ததாக கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்தது. அதுமட்டுமில்லாமல் மான்ஸ்டர் என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். இதே நிலைமை போனால் கொஞ்ச காலத்தில் நயன்தாராவை ஓரங்கட்டி விடுவார்.
முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகிய நடிகர்கள் திரைப்படத்தை தவிர மற்ற நடிகர்களின் திரைப்படத்தில் ஹீரோயினாகவே நடித்து வருகிறார். அதிலும் வருடத்திற்கு பல நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிரியா பவானி சங்கரை நடிக்கவைக்க புக் செய்து வருகிறார்கள்.
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருவார் அந்த வகையில் முதலில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கொழுக்கு முழுக்கு என அமுல் பேபி மாதிரி இருந்த ப்ரியா பவானி சங்கர் உடற்பயிற்சி செய்த உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.
அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.