சினிமாவில் பிரபலமடைந்துள்ள ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவர் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வந்தார் அதன் பிறகு இவருக்கு நடிப்பதில் அதிகாரம் இருந்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இவ்வாறு தனது முதல் சீரியலின் மூலமே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும் இவர் கடைசியாக நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த யானை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்பு நடிகர் அசோக் செல்வன் சதீஷ் ஆகியோர்கள் கூட்டணியில் வெளிவந்த ஹாஸ்டல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து நடித்து வரும் இவர் மேலும் ஐந்து திரைப்படங்கள் இருக்கு மேல் கைவசம் வைத்திருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது அதன் மட்டுமல்லாமல் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் விரைவில் அந்த திரைப்படங்களும் வெளியாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பல சேனல் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டதற்கு மாதவன் என்றும் தற்பொழுது தனுசுடன் பணியாற்ற ஆசையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். நிறைய இடங்களில் மாதவனை எனக்கு பிடிக்கும் என்று கூறி உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.