சின்னத்திரை மூலம் பல நடிகைகள் உருவாகி வெள்ளித்திரைக்கு மாறி பின்பு பல திரைப்படங்களை கைப்பற்றி தற்போது மிகவும் பிசியான நடிகைகளாக பல நடிகைகளும் வலம் வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் பிரியா பவானி சங்கர்.
இவர் இந்த சீரியலை தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது கதாநாயகியாக பல திரைப்படங்களை தொடர்ந்து வரிசையாக நடித்து வருகிறார் இவர் நடிப்பில் ருத்ரன், ஓமன பெண்ணே,குருதி ஆட்டம், பத்து தல போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
சின்னத்திரையில் சாதாரண சீரியல் நடிகையாக இருந்த இவர் எப்படி மிகப்பெரிய கதாநாயகியாக ஆனார் என்பது மிகப் பெரிய விஷயம் தான் ஆனால் இவர் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன்மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வருகிறார்.
என்னதான் இவர் மிகவும் பிஸியாக வலம் வந்தாலும் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி ஆக்டிவாக இருக்கிறார் ஆம் இவர் சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை நாள்தோறும் வெளியிடுவதால் இவரது ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
அதே போல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் பார்ப்பதற்கு இவர் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்போதுதான் நீங்கள் மிகவும் அழகாக இருக்கீங்க உங்களுக்கு வெள்ளித்திரையில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு நாங்கள் வாழ்த்துகிறோம் என கூறிவருகிறார்கள்.