தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக சக்ரா திரைப்படம் வெளிவந்து. இத்திரைப்படம் விமர்சனம் ரீதியாக ஓரளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து விஷால் சில வருடங்களுக்கு முன்பு விஷால் மற்றும் பிரசன்னா கூட்டணியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து எனிமி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து விஷால் தற்பொழுது மற்றொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அந்தவகையில் விஷாலின் அடுத்த படத்தை ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து 5 ஸ்டார் கணேசன் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இளம் நடிகைகளில் தற்போது ரசிகர்களின் பேவரைட் நடிகையான பிரியா பவானி சங்கர் இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
பிரியா பவானி சங்கர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.