சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர் இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலம் அடைந்தார் அதனால் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது சினிமாவில் முதன்முதலில் மேயாதமான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார் தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேயாத மான் திரைப்படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்தார் அதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்களுடன் மான்ஸ்டர் திரைப்படத்திலும் அருண்விஜய் அவர்களிடம் மாபியா திரைப்படத்திலும், களத்தில் சந்திப்போம், கசடதபற ஓமன பெண்ணே, ஹாஸ்டல் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர் ஏற்கனவே மாபியா திரைப்படத்தில் இணைந்திருந்தார் இந்த நிலையில் தற்போது மீண்டும் யானை என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பிரியா பவானி சங்கர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன்2 திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படம் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார்கள்.
பிரிய பவனி சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார் அதனால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுக்கொண்டார் ஆனால் இன்றுவரை கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டாமல் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் பிரியா பவானி சங்கர் பொம்மை, குதியாட்டம் அகில, ருத்ரன், திருச்சிற்றம்பலம், யானை பத்து தலை என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீப காலமாக வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்தார் அதில் அவர் கூறியதாவது நான் தப்பான படங்களிலும் நடித்துள்ளேன் அந்த திரைப்படமும் வெளியாகி விட்டது என வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரியா பவானி சங்கரா அது போல் படத்தில் நடித்து உள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.